"வாங்க கற்றுக்கொள்வோம்"..! தீ விபத்தில் இருந்து தப்புவது எப்படி? தமிழக அரசு சிறப்பு பயிற்சி!
தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீ பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை "காக்கும் பணி எங்கள் பணி" என்ற உன்னதமான நோக்கத்துடன் பொதுமக்களுக்கு சேவையாற்றும் ஒரு துறை என்று தெரிவித்துள்ளது.
பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து பொதுமக்களையும் உடமைகளையும் காப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும் இத்துறையின் முக்கிய பணி என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையால் கடந்த வருடம் "வாங்க கற்றுக்கொள்வோம்" என்ற தலைப்பில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைங்களில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
சுமார் 50000 பொதுமக்கள் இப்பியிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்டையில், தீ பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வை மேலும் பரப்பும் நோக்கில் இவ்வருடமும் இப்பயிற்சி வரும் 06.06.2026 மற்றும் 07.06.2026 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து 385 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களிலும் காலை 11.00 முதல் 12.00 மணி மற்றும் மாலை 16.00 முதல் 17.00 மணி வரையிலும் இப்பயிற்சியினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களுக்கு நேரடியாக சென்று இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!