×
 

மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!

மீன்பிடித்தடைகால நிவாரணத் தொகை தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிலரும் சில குழுக்களும் ஏற்கனவே ரூபாய் எட்டாயிரமாக வழங்கப்பட்டு வரும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு ரூபாய் ஏழாயிரமாக குறைத்துவிட்டதாக செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த செய்தி முற்றிலும் அடிப்படை இல்லாதது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மீனவ சமூகத்தினருக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் இத்தகைய தவறான செய்திகள் பரவுவது அவர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. உண்மையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் எட்டாயிரம் என்ற அளவில் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை குறைக்கப்பட்டதாகக் கூறும் எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வெளியாகவில்லை. மாறாக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்பிடி தடைக்காலம் என்பது கடல் வளங்களைப் பாதுகாக்கவும் மீன் வளத்தைப் பெருக்கவும் மேற்கொள்ளப்படும் அவசியமான நடவடிக்கையாகும். இந்தக் காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாததால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. அதனால் அரசு இந்த நிவாரணத் தொகையை வழங்கி அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி வருகிறது. ரூபாய் எட்டாயிரம் என்ற தொகை பல ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதில் எந்தவிதமான குறைப்பும் செய்யப்படவில்லை. இதற்கு மாறாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளைத் தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டவை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மீன்பிடி தடைக்கால நிவாரணம் அல்ல.

இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் RSS சாஹா பயிற்சியா? என்ன நடந்தது..? தமிழக அரசு விளக்கம்..!!

வடகிழக்கு பருவமழை காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகைதான் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூபாய் ஆறாயிரமாக இருந்த இந்தச் சிறப்பு உதவித் தொகை இப்போது ரூபாய் ஏழாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மீனவ குடும்பங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நேர்மறையான நடவடிக்கையாகும். பருவமழை காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிப்பது கடினமாக இருக்கும். அப்போது குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே இந்தச் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை மீன்பிடி தடைக்கால நிவாரணத்துடன் குழப்பிக் கொண்டு சிலர் தவறான செய்திகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர். உண்மையில் அரசு மீனவ சமூகத்தின் நலனில் அக்கறை காட்டி தொகைகளை உயர்த்தியுள்ளதே தவிர குறைக்கவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூபாய் எட்டாயிரமாகவே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share