×
 

மதுரை மேயரின் கணவர் பொன்.வசந்த் என்னுடைய மகனா? - பொங்கியெழுந்து போலீசில் புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர்...!

முன்னாள் அமைச்சர் பொன் மதுரை முத்துராமலிங்கம் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியினுடைய கணவர் பொன் வசந்த் தன்னுடைய மகன் என  தவறான தகவலை பரப்பிய 4th Estate Tamil என்ற யூடியுப் சேனல் மீதும், அதன் தொகுப்பாளர் அருள்மொழி வர்மன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன் மதுரை முத்துராமலிங்கம் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வரி முறைகேடு நடைபெற்றதாக மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த கைது செய்யப்பட்ட நிலையில் 4th Estate Tamil  என்ற youtube இணையதளத்தில் கைது செய்யப்பட்ட பொன் வசந்த் மதுரை மாவட்ட திமுக நிர்வாகி முன்னாள் அமைச்சர்ருமான பொன் முத்துராமலிங்கத்தின் மகன் என குறிப்பிட்டு பேசியுள்ளனர்

 இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி ஏராளமான பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில் தவறான தகவலை யூடியூப் சேனல் பரப்பியுள்ளதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதுபோன்ற வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் எனவும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் யூடியூப் சேனலில் அருள்மொழி வர்மன் என்பவர்  தன்னுடைய குடும்பத்தினர் என கூறி  தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்

இதையும் படிங்க: வருவாய் ஆய்வாளர் டு நாகலாந்து ஆளுநர்... ஆர்.எஸ்.எஸ். பக்தர், கவிஞர் யார் இந்த இல.கணேசன்?

இதையும் படிங்க: #BREAKING உயிர் பிரிந்தது... நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share