×
 

அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளராக இருந்த சிங்கை ராமச்சந்திரன் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) முன்னாள் மாநிலச் செயலாளரான சிங்கை ஜி. ராமச்சந்திரன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துத் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்த சிங்கை ராமச்சந்திரன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தம்மை இணைத்துக் கொண்டார்.

தவெகவில் இணைந்தது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிங்கை ராமச்சந்திரன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

அதிமுகவின் இணையதளப் பிரச்சாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவை பல ஆண்டுகள் திறம்பட வழிநடத்திய சிங்கை ராமச்சந்திரன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது திராவிடக் கட்சிகள் மத்தியிலும், குறிப்பாகத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share