தமிழ்நாட்டில் திமுகவின் 23ஆம் புலிகேசி ஆட்சி... போதைப் பொருட்கள் டோர் டெலிவரி... செல்லூர் ராஜு விமர்சனம்..!
தமிழ்நாட்டில் நடப்பது திமுகவின் 23ஆம் புலிகேசி ஆட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கே. சூரஜ் என்பவர், நான்கு 17 வயது சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை படுத்தியது. இந்த நிலையில் மற்றொரு சம்பவம் திருத்தணியில் நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாது திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக தகவல்கள் பரவி வருவதாகவும், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கெல்லாம் தமிழ்நாட்டை அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் நடமாட்டமே காரணம் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இத தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களில் நடந்த சம்பவங்கள் பெரும் பேசு பொருளாக மாறிவிட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சியை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் பயத்திலேயே வாழணுமா? தமிழ்நாடு தவித்தது போதும்... இபிஎஸ் திட்டவட்டம்...!
தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியானது 23ஆம் புலிகேசி ஆட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: வடமாநில இளைஞர் மீது தாக்குதல்.. எதையுமே கண்டுக்காத முதல்வர்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...!