“பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த கூட்டுறவு கடன் அனைத்து சங்க விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை வழங்க கோரி நெல்லையில் விவசாயிகள் போராட்டம்: மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுத்த காவல்துறையினரால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேலான நெற்கதிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். பயிரிட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து அங்கு ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள அலுவலர்கள் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அனைத்தையும் கொள்முதல் செய்து கொண்டு அதற்கான பணத்தை மூன்று மாதமாக வழங்காமல் இருக்கின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். 11 முறை மனுக்களை கொடுத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கொள்முதல் செய்ததற்கான பணத்தையும் வழங்கவில்லை இதனால் வேதனையடைந்த விவசாயிகள் இன்று புதிதாக பொறுப்பேற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனை சந்தித்து மனு கொடுக்க நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக வர இருந்தனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!
தகவல் அறிந்த காவல்துறையினர் வண்ணாரப்பேட்டை பகுதியிலேயே குவிந்திருந்த விவசாயிகளை மடக்கினர். அங்கு பேரிக்காடுகளை அமைத்து விவசாயிகளை நகர விடாமல் தடுத்தனர். இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு சில விவசாயிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக அங்குள்ள காவல் துறையினர் வாகனத்தில் அழைத்து வருவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் மற்ற விவசாயிகள் தங்களையும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையினரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்தும் பல்வேறு வகைகளில் பணத்தை செலவு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு நெல்லை அறுவடை செய்த பின்பும் அதற்கான பணத்தை கொள்முதல் நிலையங்களில் இருந்து வழங்கப்படாமல் இருப்பதால் குடும்பங்களில் மிகவும் எளிமையான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட எங்களால் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை.மத்திய அரசு எதற்காக விவசாயிகளுக்கு உதவுகிறோம் எனக் கூறுகின்றனர் அதுபோன்ற எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதேபோல் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சடலம் போல நடித்து, வாய்க்கரசி போட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் பயிர்க்கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பேரணி நடத்தினர்.
இதையும் படிங்க: தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு