×
 

முதல்வர் நாற்காலியில் விஜய்... தவெகவினரின் விநாயகர் சிலை வைரல்..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர். அது மட்டுமல்லாது வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து பொதுமக்கள் வழிபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று வடிவமைக்கப்படும் விநாயகர் சிலைகளின் அமைப்பு காண்போரை கவரும் வகையில் அமைப்பார்கள். 

வித்தியாசமான சிலைகளின் மற்றொரு சிறப்பு, அவை கலாசார மற்றும் சமூகச் செய்திகளை வெளிப்படுத்துவதாகும். உதாரணமாக, சில சிலைகள் பெண்கள் மேம்பாடு, கல்வி, அல்லது சமூக நல்லிணக்கம் போன்ற தீம்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. விநாயகர் ஒரு சூப்பர் ஹீரோவாகவோ, அல்லது சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தொழில்முறை நபராகவோ சித்தரிக்கப்படுவது, மக்களுக்கு ஒரு புதிய பார்வையை அளிக்கிறது. 

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து விடுவது போன்ற விநாயகர் சிலையை அமைத்துள்ளனர். விநாயகர் நாற்காலி இளம் இருந்து கையெழுத்து விடுவது போன்று அவரது சட்டை பையில் விஜய் படமும் வைக்கப்பட்டு இருந்தது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த விநாயகர் சிலைக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர். 

இதையும் படிங்க: கதறல் சத்தம் கேட்குதா "UNCLE"… திமுகவுக்கு பதிலடி போஸ்டர்!

இருப்பினும் இந்த விநாயகர் சிலைக்கு போலீசார் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், முதல்வர் என்ற பெயர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: தனி ஆள் இல்ல கடல் நான்! மதுரை மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share