×
 

சிறுமிகளை சீரழித்த கொடூரம்.! வீரியமெடுக்கும் ஜெம் வீரமணி வழக்கு... மேலும் ஒருவர் கைது..!!

ஜெம் வீரமணியின் வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஜெம் வீரமணியின் பாலியல் வழக்கில் தொடர்புடையதாக அவரது வீட்டில் பணியாற்றிய ஒருவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய கிரானைட் தொழில்துறையில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க தொழிலதிபராக அறியப்பட்டவர். அவரது வயது எண்பத்து நான்கு.

இந்த வழக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு குழந்தை உரிமை ஆர்வலர், ஒரு பென் டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்தன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்து, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை தனது தொழில் தொடர்புடைய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்து வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஜெம் வீரமணி போக்சோ வழக்கு... பிரகாஷ் என்பவருக்கு சம்மன்.! தீவிர விசாரணை..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணியிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என விசாரணை நடத்த புதிய குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் பிரகாஷ் என்பவருக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் மேலும் ஒருவரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகள் பாலியல் வழக்கில் வீரமணிக்கு உதவியதாக அவரது வீட்டில் பணியாற்றிய கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு கணேசன் சிறையில் அடைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: "மாப்பிள்ளை போல் அலங்காரம்"..! சிறுமிகள் பாலியல் வன்கொடுமை..!! ஜெம் வீரமணியின் குரூர புத்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share