×
 

ஏய் லூசு... நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம்! கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்.எல்.ஏ கதிரவன்!

ஆணவத்திற்குத் தேர்தலில் இருக்குது வேட்டு கிட்னி திருட்டு புகழை சுட்டிக்காட்டி அண்ணாமலை கடும் கண்டனம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கதிரவன், தேர்தல் பரப்புரையின் போது தொகுதிப் பிரச்சனை குறித்துக் கேள்வி கேட்ட வாக்காளர் ஒருவரை லூசு எனத் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆணவத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக எம்.எல்.ஏ கதிரவன், இன்று தனது தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர், தங்களது ஊரில் உள்ள ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், அந்தக் கேள்வியைக் கேட்டவரைப் பார்த்து, ஏய் லூசு... நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம் என ஒருமையில் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இது அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கமாகத் தேர்தல் முடிந்தவுடன் தான் திமுகவினர் சுயரூபத்தைக் காட்டுவார்கள். ஆனால், பிரச்சாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட அவர்களால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளாகத் தனது தந்தைக்கு ₹15 கோடியில் வெளிநாட்டுக் கார் வாங்க உழைத்துக் கொண்டிருந்தவருக்கு, ஓட்டு போட்ட மக்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது? எனச் சாடினார். கிட்னி திருட்டு' புகழ் கதிரவனின் இந்தத் திமிர் மற்றும் ஆணவத்திற்கு மண்ணச்சநல்லூர் மக்கள் இந்தத் தேர்தலில் சரியான வேட்டு வைப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகதான் உண்மையான அடிமை கட்சி! கோவையில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு!

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே வாக்காளரைப் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம் என்று கூறியிருப்பது, அந்தத் தொகுதியில் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் என்ற நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஏரியைச் சீரமைக்காமல், தேர்தல் நேரத்தில் சாக்குப்போக்குச் சொல்லும் திமுக எம்.எல்.ஏ-வின் போக்கிற்குத் தொகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறும் முதலமைச்சர்! அரசு வாகனத்தை பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share