செஞ்சி சிறுமி எங்கே?... தாய் கொடுத்த முக்கிய துப்பு... பள்ளிக்குள் நுழைந்த சிபிசிஐடி...!
சிறுமி தொடர்பாக ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 11ஆம் தேதி இரவு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் உள்ள நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பவானி – வடிவேல் தம்பதியினரின் இரண்டாவது மகள் சேமலதாவுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழா முடிந்து இரவு தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் மாயமானார்.
இந்த வழக்கு தொடர்பாகப் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் சுமார் 10 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் ரேவதி ஆகியோர் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஏற்கெனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கூடுதலாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 20 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவும் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாயிடம் டஜன் கணக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள்... சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த திடுக் தகவல்கள்...!
இந்த வழக்கில் குற்றப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள சரித்திரப் பதிவுக் குற்றவாளிகளின் விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று சிறுமியின் பெற்றோரான வடிவேல் மற்றும் பவானியிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைக்குப் பிறகே சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாக மேலும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கடைக்காரர்கள், அக்கம்பக்கத்தினர், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் சிறுமியுடன் படித்த குழந்தைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பிறந்தநாள் விழாவுக்காகச் சாக்லேட் மற்றும் கேக் வாங்கச் சென்ற கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளிலும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சிறுமியின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலக் காவல்துறையினருக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தொடர்பு விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறுமி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறுமி தொடர்பாக ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: “அடப்பாவிகளா 2 முறையா?”... நாகர்கோவில் சபரிவர்மன் லாக்அப் மரணத்தில் அதிர்ச்சி... சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் திகில்...!!