“அடப்பாவிகளா 2 முறையா?”... நாகர்கோவில் சபரிவர்மன் லாக்அப் மரணத்தில் அதிர்ச்சி... சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் திகில்...!!
இரண்டு முறை கட்டி வைத்து சாராமாரியாக தாக்கி இறுக்கமாக கட்டி போட்டுள்ளனர். இதில் முதன்மை வார்டன் ஜெகனின் காலணி முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு. 2 முறை லுங்கியால் கட்டி வைத்து அடித்து கொலை செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கையில் அவரது உடலில் 17 காயங்கள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் இருந்த சபரிவர்மனை சிறை வார்டன்கள், கைதிகளை தூண்டி விட்டு சபரிவர்மனை தாக்கியது தெரியவந்தது.
இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!
இந்த வழக்கில் 3 வார்டன்கள், 8 கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிபிசிஐடி போலீசார் 11 பேருக்கும் எதிராகப் பலத்த ஆதாரங்களுடன் கூடிய 1200 பக்கங்க கொண்ட குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
சிறைக்குள் அவர் மீது நடத்தப்பட்ட சரமாரியான தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களால் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. சபரி வர்மன் மதுப்பழக்கம் உடையவர் என்பதால்,மன உளைச்சலில் நள்ளிரவு கூச்சலிட்டு ரகளை செய்துள்ளார். இதனால் சக கைதிகள், சபரிவர்மன் பையில் இருந்த லுங்கியால் அவரை ,இரண்டு முறை கட்டி வைத்து சாராமாரியாக தாக்கி இறுக்கமாக கட்டி போட்டுள்ளனர். இதில் முதன்மை வார்டன் ஜெகனின் காலணி முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் அசைய முடியாத நிலையில் தரையில் கிடந்ததால் அவருக்குத் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசாரின் ஆரம்பகட்ட கைது நடவடிக்கைகள் சட்டப்படி இருந்த போதிலும், கிளை சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு கைதிகள் மற்றும் காவலர்களின் அலட்சியத்தாலும், கொடூரத் தாக்குதலாலுமே சபரிவர்மன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சிபிசிஐடி போலீசார் தங்களது குற்றப்பத்திரிகையில் பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!