கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு..!
இளம் பெண்களுக்கு உதவுவது போல் பழகி திமுக நிர்வாகி ஏமாற்றியதாக இளம் பெண் புகார் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகி தெய்வ சாயல் என்பவர் பல பெண்களுக்கு உதவுவது போல் நடித்து ஏமாற்றி இருப்பதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் டிஜிபி அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், தெய்வ சாயலை காவல்துறையினர் தப்பிக்க வைக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார்.
திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருக்கும் இவர் மீது புகார் அளித்தாலும் காவல்துறையினர் ஏற்க மறுப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், திருமணம் செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், திமுக நிர்வாகிகளுக்கு தன்னை தாரை பார்க்க முயற்சித்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: கொள்கை நெறி தவறாதவர்..! சோ.மா.ராமசந்திரன் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து..!
ஏழைப் பெண்களை குறி வைத்து திமுக நிர்வாகி தெய்வ சாயல் ஏமாற்றுவதாகவும், 20 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் தெய்வ சாயல், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஒரு கையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டேட்டுவும், ஒரு கையில் உதயநிதி ஸ்டாலின் டாட்டூவும் இருப்பதை காட்டி, எத்தனை மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!