×
 

PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க... டுவிஸ்ட் வைத்த ஜி.கே மணி!

அனைவரும் எதிர்பார்ப்பது போல நல்ல செய்தி விரைவில் வரும் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாக ஜி.கே மணி கூறினார்.

பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாமக நிறுவனர் ராமதாசை அவரது மகள் கவிதாவின் வீட்டில் சந்தித்ததாகவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

அப்போது அன்பு மணியுடன் இணைந்து இருவருமாக ஒற்றுமையுடன் கட்சியை வழி நடத்த வேண்டும், என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளது விரைவில் நல்ல செய்தி வரும் என்ற ராமதாஸ் நம்பிக்கையுடன் கூறியதாகவும் இது தனக்கும் தங்கள் கட்சி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!

பலமான, வலிமையான, தனித்துவமான, குடும்ப பாங்கான கட்சி பாமக என்றும், விரைவில் சந்தித்து, நல்ல செய்தியை அறிவிப்பார்கள் எனவும் கூறினார். பாமகவின் நடப்பது அரசியல் நாடகமா என்ற செய்தியாளர் கேள்விக்கு ஜி.கே மணி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share