×
 

கட்சியை கடந்த அன்பு! ஓடோடிச் சென்று ஜி.கே.மணியிடம் நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை..!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணியை செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஜி.கே. மணி பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவராக உள்ளார். அவருக்கும் பாமகவுக்கும் இடையிலான உறவு கட்சியின் அரசியல், அமைப்பு மற்றும் தலைமைத்துவ அமைப்பில் முக்கியமானது. ஜி.கே. மணி 2019 வரை பாமகவின் மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பு அன்புமணி ராமதாஸுக்கு மாற்றப்பட்டபோது, ஜி.கே. மணி கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவி, அவரது அனுபவத்தையும், கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. ஜி.கே. மணி, பாமகவின் முக்கிய முடிவுகளில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் பங்காற்றுகிறார். குறிப்பாக தற்பொழுது ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் கூட ஜி.கே மணி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சிப் பணிகள் முதல் உட்கட்சி பூசல் வரை பல்வேறு விவகாரங்களில் ஜிகே மணியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருக்கும் பாமக எம்.எல்.ஏக்கள்... பெயர் குறிப்பிடாமல் அன்புமணி சொன்ன சொல்!!

இந்த நிலையில் சேலத்தில் அன்புமணி அணி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஜிகே மணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜி கே மணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்து நலம் விசாரித்தார். சேலத்தில் அன்புமணி தலைமையில் பாமக கூட்டம் நடைபெற்ற நிலையில் ஜிகே மணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனிடையே ஜி.கே மணியை சந்திப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாசும் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். 

இதையும் படிங்க: பாமகவில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்.. கௌரவ தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share