×
 

தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!

சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான 46 கிலோ தங்க நகைகள் பறிமுதல். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.

செங்குன்றம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பிரபல நகை கடைக்கு சொந்தமான சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான 46 கிலோ தங்க நகைகள் பறிமுதல். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாதவரம் சட்டமன்ற தொகுதியில் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சென்னையில் அமைந்துள்ள பிரபல நகை கடைக்கு சொந்தமான சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான 46 கிலோ தங்க நகைகள் என்பதும், இவற்றை உருக்கி புதிய நகை செய்வதற்காக நகை பட்டறைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?

இதனை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தங்க நகைகளை பறிமுதல் செய்து, மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் முன்னிலையில் நகைக் கடை ஊழியர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். எனினும் அதிகளவிலான நகைகள் என்பதால் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நகைகள் அனைத்தும் உரிய முறையில் கணக்கில் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்திட ஏதுவாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 65 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு நகை கடையின் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share