×
 

சோலி முடிஞ்சுது..! ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... தவிக்கும் நடுத்தர மக்கள்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 105 ரூபாய் உயர்ந்து, 74 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. 70 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவையே இந்த விலையேற்றம் கலைத்து விடுகிறது. ஒரு சில நாட்களில் தங்கம் விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.

அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் 9,320 ரூபாய்க்கும் ஒரு சவரன் 74,560 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை 73,440 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் ரூ.9,180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9285 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு 'NO CHARGE'.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் இனி நகை வாங்க வேண்டும் என்ற எண்ணமே நடுத்தர மக்களிடம் இல்லாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளது. ஜெட் வேகத்தில் ஏரும் தங்க விலை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: எதுக்கு எங்கள ஏமாத்துறீங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share