காலையிலேயே அதிர்ச்சி... வேன் மீது மோதிய அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?
வேனும் அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலையும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை பகுதியை சேர்ந்தவர்கள் 20 பேர் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் தனியார் நிறுவனத்திற்கு இன்று அதிகாலை வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி நோக்கி செல்லும் அரசு பேருந்தும் கேளம்பாக்கம் நோக்கி செல்லும் வேணும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அம்முலு வயது 24, உமா வயது 40 இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மற்றொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியை உலுக்கிய கோர விபத்து..!! தனியார் பேருந்தின் உரிமம் ரத்து..!! கலெக்டர் அதிரடி உத்தரவு..!!
இதையும் படிங்க: வேதனையா இருக்கு... தென்காசி பேருந்து விபத்து... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஆணை...!