×
 

அரசு பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து... 35 மாணவர்களின் நிலை என்ன?

வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் காலை சிற்றுண்டி சமைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் இடிந்து விழுந்த சுவர் - மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவீதம் தவிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 35 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் காலை சிற்றுண்டி சமையல் கூடம் உள்ளது. இதில் கியாஸ் சிலிண்டர் மூலம் சிற்றுண்டி சமைத்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமையல் கூடத்தில் 2 முழு சிலிண்டர்கள் மற்றும் ஒரு காலி சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு லட்சுமி என்பவர் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இன்று லட்சுமி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுப்பில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி சமையல் கூடத்தைவிட்டு வெளியே ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதையும் படிங்க: கடவுள் தேசத்தில் பேய்மழை.! திரிச்சூர் கட்டடம் இடிந்ததால் அலறி துடித்த உயிர்கள்.!

இதில் சமையல் கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. அப்போது பள்ளிக்கு மாணவர்கள் அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவீதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீரை அடித்து நெருப்பை அணைத்தனர். மேலும் சமையல் கூடத்தில் வெடிக்காமல் இருந்த 2 சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.

இதை அறிந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, சமையல் கூடத்திற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து, சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பள்ளி சமையல் கூடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எங்க உயிர் அவ்வளவு அலட்சியமா? அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மக்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share