பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மேடையிலேயே தடுக்கி விழுந்த ஆளுநர் அர்லேகர்... என்ன ஆச்சு?
பட்டங்களை வழங்கிவிட்டு கிளம்பும்போது மேடையிலேயே தவறி கீழே விழுந்த தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டங்களை வழங்கிவிட்டு கிளம்பும்போது மேடையிலேயே தவறி கீழே விழுந்த தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர்
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 1,103 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர், மொத்த பட்டதாரிகளில் 616 பேர் பெண்கள். 37 பெண்கள் உட்பட 50 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ,பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி. பத்மநாபன், துணைவேந்தர் முதுநிலை பேராசிரியர் சுலோச்சனா சேகர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!
பட்டமளிப்பு விழாவின் துவக்கமாக, வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
முதலாவதாக வந்தே மாதரம் பாடல் பாடப்படும் என நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் அறிவித்த நிலையில் உடனே குறிக்கிட்ட இந்திய துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தவுடன் சில கருத்துக்களை கூறினார். அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் நிசப்தமாக அமைதியான சூழல் நிலவியது. பின்னர் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு தொடர்ச்சியாக தமிழ் தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா துவங்கியது.
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய பின்பு அங்கிருந்து கிளம்பினார் இந்திய துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவரைத் தொடர்ந்து மேடையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர்., மேடையில் இருந்த மேடு பள்ளத்தை கவனிக்காமல் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது உடனடியாக ஆளுநரை தூக்கிய அதிகாரிகள் ஆளுநர் அர்லேக்கருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேக்கர் நிகழ்ச்சி மேடையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இதே போல மேடை அமைப்பில் குளறுபடியால் மாணவிகள் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போதும் இரண்டாவது ஆண்டாக மேடை அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழ்நாடு ஆளுநர் மேடையிலேயே கீழே விழுந்த சம்பவம் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் கீழே விழுந்ததை மறைக்கும் வகையில், யாரும் பார்க்காத வகையில் யூட்யூபில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தியது தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக நிர்வாகம்.
செய்தியாளர்கள் செல்போன் மற்றும் கேமிரா எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு யூட்யூப் நேரடி ஒளிபரப்பு மூலம் மூலம் செய்திகள் சேகரிக்க சொன்ன நிலையில் தற்போது லைவ் லிங்க்கும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!