ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்... அண்ணாமலைப் பல்கலை. யில் பரபரப்பு..!
முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான மோதல் என்பது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களிலும் பிரதிபலிக்கிறது. மாணவர்கள் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது, மேடையில் ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும்போது மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டத்தை பெற மறுத்துள்ளார். ஆளுநரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளாமல் நேரடியாக துணைவேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் மாணவி ஆளுநர் அழைத்தும் அருகில் சென்று பட்டம் பெற மறுத்த மாணவி துணைவேந்தரிடம் சென்று முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தலை விரித்து ஆடும் போதை... ஒதுங்கி நிற்கும் மாநில அரசு... வெளுத்து வாங்கிய TTV..!
தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி தொடர்ந்து எதிராகவே செயல்படுவதால் அவரிடமிருந்து பட்டம் பெற மாணவி மறுத்ததாக கூறினார். ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை இதுபோன்ற சம்பவங்கள் பிரதிபலிக்கிறது. கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்து இருந்தனர்.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற போது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி இருந்தார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை கையில் வைத்திருந்தார். முதல்வர் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மிகச்சிறந்த காமெடியன் விஜய்... முதல்வரை சீண்டியதால் டி கே எஸ் இளங்கோவன் பதிலடி...!