×
 

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து.. தவெக கட்சியை அழைத்த ஆளுநர்..!!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்துக்கு தவெக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கும் வழக்கமான நிகழ்வு இந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்நிகழ்வு ஒற்றுமையையும், தேசபக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு மரபாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த முடிவு, ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் அரசியல் மற்றும் நிர்வாக முரண்பாடுகளை பிரதிபலிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்த புறக்கணிப்பு முடிவை அறிவித்து, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று NO NONVEG விற்பனை.. மராட்டிய மாநிலத்தில் கிளம்பிய எதிர்ப்பு..!!

கடந்த ஆண்டுகளில், சுதந்திர தின தேநீர் விருந்து அரசியல் கட்சிகளுக்கு இடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு தளமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு புறக்கணிப்பு அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை இந்த விருந்தை வழக்கம்போல நடத்த திட்டமிட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றுதல், பேச்சுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த புறக்கணிப்பு, ஆளுநருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. இது, வருங்காலத்தில் அரசியல் உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்தது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இருப்பினும் கடந்த முறை விஜய் இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் 2022-ல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share