×
 

பட்டம் கொடுக்கும் தகுதி ஆளுநர் ரவிக்கு இல்லை..! பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் சேப்பாக்கம் முதன்மை வளாகமாக உள்ளது. இதைத் தவிர மரினா, கிண்டி, தரமணி, மதுரவாயல், செட்பேட் ஆகிய இடங்களில் மேலும் ஐந்து வளாகங்கள் உள்ளன. இந்த வளாகங்களில் 87-க்கும் மேற்பட்ட துறைகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நடைபெறுகின்றன.

அறிவியல், சமூக அறிவியல், மனிதவியல், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 230-க்கும் மேற்பட்ட பாடத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்துடன் 121 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 53 அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொலைதூரக் கல்வி நிறுவனம் (Institute of Distance Education - IDE) மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைகின்றனர்.

இதில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் 167 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்தப் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் களம்..! சட்டப்பேரவை 3 ஆம் நாள் கூட்டம்..! கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில்..!

தமிழக மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி பொய்களை பரப்பும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை என்றும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ் நாட்டுக்கும் எதிரான செயல்களை ஆளுநர் ரவி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் செயல்படுகிறார் ஆளுநர் ரவி என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வைத்திலிங்கம் முடிவு துரதிஷ்டவசமானது..! எனக்கு ஒரே நிலைப்பாடு தான்...! சசிகலா ஆதங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share