×
 

அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு..??

பொன்னேரி அருகே அரசுப் பேருந்து ஒன்று அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே இன்று அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் டி40 இன்று காலை வழக்கம்போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தது.

நேற்று இரவு முதல் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் விடிய விடிய மழை பெய்ததன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதியுற்றனர். இந்த நிலையில் அரசுப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதியது.

இதில் பேருந்தின் ஒருபக்க சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது, பயணிகளிடையே பெரும் பதற்றம் நிலவியது. பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள், அலறியடித்து வெளியேறினர். உள்ளூர் மக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இதையும் படிங்க: “போட்டாரே ஒரு போடு”... அமித் ஷாவையே மிரண்டுபோக வைத்த அண்ணாமலை... திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இதுவா?

கனமழை காரணமாக சாலை வழுக்கியதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொன்னேரி காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டு பணிமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து பராமரிப்பு மற்றும் குறுகிய சாலைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, சாலை வசதிகளை மேம்படுத்தவும், பேருந்துகளின் பராமரிப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த தலைவலி... சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share