×
 

ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!

தீபாவளி பண்டிகையை ஒட்டி கனரக வாகனங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான சாலைப்பாதைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலை, சென்னையை தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு வாசல் போன்றது. இந்த சாலை, தினசரி லட்சக்கணக்கான வாகனங்களை சந்திக்கிறது என்றால், பண்டிகை காலங்களில் அது ஒரு பெரும் போர்க்களமாக மாறிவிடுகிறது. பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளின் போது, குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் பெருந்திரளாக இந்த சாலையில் இறங்குவதால், கனரக வாகனங்கள்., அவற்றுள் லாரிகள், பேருந்துகள், ஓம்னி பஸ்கள் மற்றும் பிற கனமான வாகனங்கள், இதன் வேகத்தை மட்டும் இல்லாமல், பயணிகளின் வாழ்க்கையையும் கடினமாக்குகின்றன.

மதுராந்தகம் முதல் பெருங்களத்தூர் வரையிலான 50 கி.மீ. தொலைவில் பல மணிநேரங்கள் மக்கள் சிக்கிக் தவிக்கின்றனர். வரும் இருபதாம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். ஏராளமானோர் வெளிஊருக்கு செல்ல இருப்பதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது

இதையும் படிங்க: தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இந்த வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 17,18 ஆகிய 2 நாட்கள் சென்னை முதல் விழுப்புரம் வரை ஜி.எஸ்.டி சாலையில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி (சென்னை - திருச்சி) தேசிய நெடுஞ்சாலையை சென்றடையலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: தீபாவளி பலகாரம்... லைசன்ஸ் இல்லைனா பத்து வருஷம் ஜெயில்! வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share