தீபாவளி பலகாரம்... லைசன்ஸ் இல்லைனா பத்து வருஷம் ஜெயில்! வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு...!
தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 11 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதல் இடத்தை பிடிப்பது பட்டாசு. அதற்கு அடுத்தபடியாக பலகாரம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பலகாரம் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்வது வழக்கம். வீட்டில் பலகாரம் செய்ய முடியாதவர்கள் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை பலகாரம் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 11 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களை மூடிய நிலையில் வைத்திருத்தல் வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. உணவை கையாளுபவர்களுக்கு மருத்துவத் தகுதி சான்று கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் அல்லாத இனிப்புகளை தனித்தனியாக பொட்டலம் இட வேண்டும் என்றும் பணியாளர்கள் தலையுறை, கையுறை, மேலங்கி அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும், ஏதேனும் தவறு இருந்தால் 9444042322 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சாதிப்பெயர் நீக்குங்கள்... நவம்பர் 11 வரைக்கும் தான் டைம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பத்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பலகாரம் செய்ய தரமான எண்ணெய் மற்றும் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசு பதில் அளிக்க ஆணை... அதிரடி காட்டிய நீதிமன்றம்...!