தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!
கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொலை செய்த பிரியாணி டபராவில் வேகவைத்த கொலை குற்றவாளி பகீர் வாக்குமூலம் கொடுத்தார்.
கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்த விவகாரத்தில் கொலையாளியின் பகீர் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ஆக்ராவில் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி கூடுவாஞ்சேரி வீட்டை அடையாளம் கண்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சமையலறையில் பிரியாணி சமைக்கப் பயன்படும் பெரிய அண்டா ஒன்று இருந்தது. அதில் ரத்தக் கறைகளும், மைதா மாவும், காய்கறிகளும் கலந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மணிப்பூரில் தலைமறைவாக இருந்த மாணிக்கை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கைதாகி உள்ள மாணிக் புதின் லஸ்கரின் காதலியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு தொடர்பான கொலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையாளியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து வந்தனர். அவரது மனைவியை தேடி வந்த நிலையில் அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிரியாணி அண்டாவில் உடலை வேக வைத்த கொடூர சம்பவத்தில் தம்பதி பிடிபட்ட நிலையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. இளம்பெண் ஹயத்துன் நிஷா கர்ப்பமாக இருந்துள்ளார். மாணிக்கிடம் திருமணம் செய்யுமாறு நிஷா கூறிய போது தனக்கு முன்பே திருமணம் ஆகி விட்டதாகவும் கர்ப்பத்தை கலைக்குமாறும் தெரிவித்திருக்கிறார். மாணிக் தனது இளம் மனைவியுடன் சென்று நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்குவாதமாக மாறி அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!
நிஷாவின் கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்து தம்பதி கொடூர செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. உடலின் சதை பகுதிகளை வெட்டி அண்டாவில் போட்டுவிட்டு எலும்பு பகுதிகள் சூட்கேசில் அடைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று அந்த இளம் பெண் மிரட்டியதால் அவரை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. எலும்பு பகுதிகளை சிவப்பு நிற சூட்கேசில் அடைத்து ஆக்ராவிற்கு ரயிலில் அனுப்பி இருக்கின்றனர். எலும்பு சதை ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எடுத்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
இதையும் படிங்க: பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!