×
 

1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு..! பிரம்மாண்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு... அமைச்சர் கீர்த்தனா உறுதி..!!

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா பேசினார்.

கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் காலை 11 மணிக்கு வெற்றி தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.  மாநாட்டிற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தின் உற்பத்தித் துறை, மின்சார வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை இந்த மாநாடு உருவாக்கியுள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக் கூடாது என்று கூறினார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு. நம்பகமான மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு என்றார்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு வந்த மெகா முதலீடு..! ரூ.67,452 கோடி..! ஒரே மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!!

தவெக ஆட்சியமைத்த முதல் நாளில் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி முதலீடுகள். நிறுவனங்கள் தொடங்க 21 நாட்களில் அனுமதி என்று திறமையும், மனித வளமும் தமிழகத்தில் குவிந்துள்ளது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share