ஆய்வுகள் போதும்... ஆக வேண்டியத பாருங்க..! விளாசிய H. ராஜா..!!
தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் H. ராஜா பல்வேறு வலியுறுத்தல்களை முன்வைத்தார்
ஆய்வுகள் போதும், ஆக வேண்டியதை செய்யுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் 700 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 300 மேல்நிலைப்பள்ளிகளிலேயே தலைமையாசிரியர் பதவிகள் காலியாக இருப்பது என்பது பெருத்த அவலம் என்று கூறினார்.
தவிர, 20 மாவட்ட கல்வி அதிகாரிகளின் காலி பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. மே மாத இறுதியில், ஒரே நாளில் 5000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதிலும் 30 தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் 3 முதன்மைக் கல்வி அதிகாரிகள் அடக்கம் என்றும் தெரிவித்து உள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில்தான் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி கல்வித்துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். வழக்குகளில் பெரும்பாலானவை ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களே தொடர்ந்தவை. அவர்கள் இழுத்தடித்த வழக்குகளை தவெக ஆட்சியிலும் இழுத்தடிப்பது முறையல்ல என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திருந்தாத திமுக..! வருந்தாத உதயநிதி..! பூந்து விளாசிய H. ராஜா..!!
கள ஆய்வு செய்தோம்…முதல்வரோடு கலந்தாலோசித்து வருகிறோம் என்றெல்லாம் கல்வியமைச்சர் பேட்டிகள் அளித்தால் மட்டும் போதாது என்றும் நிஜமாகவே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். நீதிமன்ற வழக்குகள் முடிவடையும் வரை ஆசிரியர் பதவிகளை காலியாகவே வைத்திருப்பது முறையல்ல என்பதை முதல்வர் உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!