நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!
நெல்லையில் நகைக்கடை சுவற்றில் ஓட்டையைப் போட்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரவநல்லூரில் துணிகரம்; நகைக்கடையில் ஓட்டை போட்டு சுமார் அரை கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி கொள்ளை. கைரேகை நிபுணர்கள், தடைய அறிவியல் குழுவினர் உதவியுடன் மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த அலியார் என்பவர் வீரவநல்லூர் பஜார் பகுதியில் ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு இன்று காலை கடை உரிமையாளர் கடையை திறப்பதாக வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் முன்புற கதவை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!
தொடர்ந்து விரைந்து வந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு கடையில் இருந்த சுமார் அரை கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மதிப்பு ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் மற்றும் தடைய அறிவியல் சோதனைக் குழுவினர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வீரவநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் தனிப்பட்ட அமைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்..
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!