ச்ச்சீ... ஒரு TEACHER பண்ற வேலையா இது? நெல்லையில் அதிர்ச்சி! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...
நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. திருநெல்வேலியில் பள்ளி மாணவிகளுக்கு ஆங்கில ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம், தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் குரு விநாயகம். 52 வயதான இவர், பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து முதன்மைக் கல்வி அதிகாரி சிவகுமார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதுடன் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்களே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இதையும் படிங்க: விழுப்புரத்தில் நேர்ந்த கொடுமை! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் ஆசிரியர் கைது..!!