விழுப்புரத்தில் நேர்ந்த கொடுமை! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் ஆசிரியர் கைது..!!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பால் வில்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், விழுப்புரத்தில் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பால் வில்சன். அங்கு பயிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்.. 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பள்ளி உரிமையாளர் மகனை தட்டி தூக்கிய போலீஸ்..!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியர் பால் வில்சனை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் பால் வில்சனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கல்விப் பயலும் இடங்களில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது..!