காமப்பேய்... அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... இயற்பியல் ஆசிரியருக்கு வலை வீச்சு...!
அரசு பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றம் சாட்டியும் பெண் தலைமை ஆசிரியர் அன்னை ஷீபா பிளவர் லைட் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ... பாலியல் தொல்லை... அச்சத்தில் மாணவிகள்... ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ...!
இதன் காரணமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் ஷீபா பிளவர் லைட் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து உள்ளனர். போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குற்றங்களை தடுக்காமல் பண்பட்ட சமூகம்- னு சொல்ல முடியாது... கோவை மாணவிக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி...!