×
 

கேரள நடிகை வன்கொடுமை வழக்கு... குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு...!

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடிகையை வழிமறித்து கேரவனுக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். இந்த சம்பவம் கேரளாவின் மலையாள சினிமா உலகை மட்டுமல்லாமல், முழு இந்தியாவையும் நடுங்கடித்த ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. ஒரு பிரபலமான தென்னிந்திய நடிகை, திரிசூரிலிருந்து கொச்சியின் பக்கம் பயணித்துக்கொண்டிருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 

 கேரவனில் நடிகை சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை வழிமறித்து அத்துமீறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். நடிகர் திலீப் உள்ளிட்ட எட்டு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. நடிகையின் மீது இருந்த முன் பகையின் காரணமாக நடிகர் திலீப் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் திலீப்பை விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆறு நபர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப்பை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அப்பாடா...!! நிம்மதி பெருமூச்சுவிட்ட திமுக... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்...!

நடிகை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் திலீப்பின் பங்கு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. திலீப்பின் பங்கு குறித்து போதி ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நடிகர் திலீப் கிட்ட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆறு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: இன்னும் 4 மாசம் குடுப்பீங்க... உங்க நாடகம் எல்லாருக்கும் தெரியும்..! விளாசிய அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share