×
 

#BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!

நெல்லையில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..!!

நெல்லையில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆனந்த் சேகர் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அருகே அழகிரிபுறத்தைச் சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் மூன்று சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை மேலப்பாளையம் அடுத்த அழகிரி புறத்தைச் சேர்ந்தவர் 41 வயதான ஆனந்த் சேகர். இவர் ஆறு வயது, ஏழு வயது மற்றும் எட்டு வயதுடைய 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயத்துடன் இருந்த சிறுமிகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உண்மை அம்பலப்பட்டது.

தொடர்ந்து, மூன்று சிறுமிகளை சீரழித்த கூலி தொழிலாளி ஆனந்த் சேகர் கைது செய்யப்பட்டார். புகார் அளிக்கப்பட்டதும், திருநெல்வேலி போலீசார் விரைந்து செயல்பட்டு ஆனந்த் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: பிளஸ் டூ மாணவி கொடூர கொலை... அவ்வளவும் அலட்சியம்..! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!

நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனந்த் சேகரை குற்றவாளி என அறிவித்து, தூக்கு தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இது மிகக் கடுமையான தண்டனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இத்தகைய குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சமூகத்தில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் நீதிமன்றம் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடித்துள்ளது.

இதையும் படிங்க: +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share