×
 

அடப்பாவிகளா... இளம் பெண்ணை நண்பனோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன்... லாடம் கட்டிய போலீஸ்...!

தஞ்சையில் இளம் பெண்ணை தனது நண்பனோடு சேர்ந்து காதலன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியை இது உருவாக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு என்பது தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரில் நிகழ்ந்த ஒரு கொடூரம் அனைவரையும் அதிர செய்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் காதலன் நண்பனோடு சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டம் கலியக்காவிலை அருகே உள்ள மடிச்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அஜித் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் செல்லும்போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தனது காதலன் அஜித்துடன் இளம்பெண் வெளியில் சென்ற நிலையில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜித் தனது நண்பன் சஜின் ராஜ் உடன் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அறிந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

தகவலின் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த அஜித் மற்றும் சஜின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காதலியை நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எனக்கு ஆயுள் தண்டனை வேண்டாம்... பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி மேல்முறையீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share