எனக்கு ஆயுள் தண்டனை வேண்டாம்... பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி மேல்முறையீடு...!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வெளியானது. கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வீடியோ எடுத்து கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் அம்பலமானது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளாக இந்த 9 பேரையும் சிபிஐ அடையாளம் காட்டிய நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். கூட்டுப் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு விவரங்கள் பிற்பகல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுக்க சிறையில் வைக்கும் தண்டனை அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காமப்பேய்... அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... இயற்பியல் ஆசிரியருக்கு வலை வீச்சு...!
இந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருநாவுக்கரசு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் ஒன்பது பேரில் ஒருவரான திருநாவுக்கரசு தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ... பாலியல் தொல்லை... அச்சத்தில் மாணவிகள்... ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ...!