காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!
காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ ஹஸன் மௌலானா தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜே.எம்.எச். அசன் மவுலானா மீது தேர்தல் ஆணையம் 2021 சட்டமன்றத் தேர்தல் செலவுக் கணக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசன் மவுலானா, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததாகவும், சில செலவுகளை மறைத்ததாகவும் புகார்கள் எழுந்தன.தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மார்ச் 27 மற்றும் 28, 2021 ஆகிய தேதிகளில் பல்வேறு தமிழ் நாளிதழ்களில் வெளியான பத்து விளம்பரங்களுக்காக சுமார் 33.05 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த விளம்பரங்களில் அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்ததோடு, அவருக்கு வாக்களிக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தொகை அவரது அதிகாரப்பூர்வ தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிக்கை அளித்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 77 மற்றும் 78-இன் படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது தேர்தல் செலவுகளை துல்லியமாகப் பதிவு செய்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தவறுதல் ஏற்பட்டால் பிரிவு 10ஏ-இன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராக அறிவிக்கப்படலாம்.
அசன் மவுலானா தரப்பில், இந்த விளம்பரச் செலவுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் மேற்கொள்ளப்பட்டவை என்றும், ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்தபோது கூட்டணி வேட்பாளர்களுக்காக வெளியிடப்பட்டவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. கட்சியும் இதற்கு உறுதி அளித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. விளம்பரங்களில் தனிப்பட்ட வேட்பாளரின் படம் இடம்பெற்றிருப்பதால் அது அவரது செலவாகக் கருதப்பட வேண்டும் எனக் கருதியது.இதையடுத்து 2023 மார்ச் 16 அன்று தேர்தல் ஆணையம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் 2025 ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசன் மவுலானா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 2025 செப்டம்பர் 12 அன்று முதல் கோர்ட் பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து, தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டது. வேளச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஹஸன் மௌலானா மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை மறைத்ததாக கூறி தேர்தல் ஆணையம் உத்தரவு. 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணை விதித்த அளவைவிட கூடுதல் பணம் செலவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பான விசாரணைகளுக்கும் ஹசன் மௌலான ஆஜராகவில்லை. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் வார்த்தையை விட்ட புஸ்ஸி ஆனந்த்... தூத்துக்குடி தவெக முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் வழக்கில் திடுக் திருப்பம்...!