மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரைச் சந்தித்த பின் வைகோ பேட்டி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உருக்கமானப் பேட்டி அளித்துள்ளார்.
நல்லகண்ணு ஐயா அவர்கள் ஒவ்வொரு முறை உடல்நலக் குறைவு ஏற்படும்போதும், ஒரு போராளியாக மீண்டெழுந்து வந்தவர். அதே மன உறுதியுடன் இந்த முறையும் அவர் விரைவில் பூரண நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்புவார் என நம்புகிறேன்" என வைகோ தெரிவித்தார். வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பொதுவாழ்வில் தூய்மைக்கும், நேர்மைக்கும் உதாரணமாகத் திகழும் நல்லகண்ணு ஐயா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..!! மருத்துவ நிர்வாகம் கொடுத்த அப்டேட்..!!
தமிழக அரசியலின் 'பீஷ்மர்' என அழைக்கப்படும் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலையைச் சிறப்பு மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி.. வைகோவிற்கு ஞாபக மறதி...! செல்லூர் ராஜு அதிரடி பேட்டி!