×
 

திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா?... மகா தீபம் ஏற்றும் போது மாறப்போகும் நிலவரம்... ஹேமசந்தர் எச்சரிக்கை...! 

சென்னை உள்ளிட்ட வடகடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழையின் தாக்கம் நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக கடற்கரையோர பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை நிலவரப்படி மாமல்லபுரத்திற்கு தெற்கே கரையைக் கடந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, அரபிக்கடல் பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக நேற்று இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒட்டுமொத்த வட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு நெய் காணிக்கை செலுத்தப் போறீங்களா?... இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...!

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டியிருக்கக்கூடிய ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

சென்னை புறநகர் மாவட்டங்களைப் பொறுத்தவரை விட்டு, விட்டு மழையானது தொடரக்கூடும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், மலையில் தீபம் ஏற்றும் நேரத்தில் சற்றே மழையின் தாக்கம் குறையக்கூடும் எனறும் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். 

தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலை நோக்கி நகர்ந்த பின்னர் ஈரப்பதமான காற்றை ஈர்த்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவை கொண்டு வரக்கூடும் என்றும், அதனையடுத்து படிப்படியாக மழையின் தாக்கம் குறையக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி...!! பிரித்து மேயப்போகும் கனமழை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share