×
 

அலர்ட் மக்களே...!! 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகீர் சம்பவம்... தாமிரபரணி கரையோர மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை...!

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மருதூர் அணை மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.  

வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக பரவலாகப் ழை பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 19500 கன அடி  தண்ணீர் வெளியேறிச் கடலுக்கு செல்கிறது. 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் அணையான  மருதூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து 20ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்கு செல்கிறது. தாமிரபரணி பாசனத்தில் 80 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மருதூர் அணை மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.  

இதையும் படிங்க: ஆத்தாடி...!! பாய்ந்து வருது 3,000 கன அடி... சென்னைக்கு ஆபத்தா?

மேலும் தொடர் மழை காரணமாகதூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
குறிப்பாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலத்தின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இதனால் இன்று கூடுதலாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் என்பதால் மழை வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழை போல் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களை தங்க வைப்பதற்கான முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாய்ந்து வரும் ஆபத்து... 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share