×
 
☰

நவம்பரில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னையில் வரும் அக். 24, 25 ஆகிய தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.

தென் தமிழகப் பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், தலைநகர் சென்னையில் வரும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்தார். தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்றும், வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மழைப்பொழிவு படிப்படியாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், எனினும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய வட கடலோர மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் நவம்பர் முதல் வாரத்தில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தனது பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்...!! - மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய சென்னை... இனி அந்த பிரச்சனையே கிடையாது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share