×
 

பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

பட்டியலிட மாணவர்கள் மர்ம மரணம் குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025 ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த மர்மமான சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அருகே உள்ள விழுதவாடி கிராமத்தின் ஏரியில் மூன்று 17 வயது மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த மாணவர்கள் விஷ்வா, சந்திரன், பரத் ஆவர்.

இவர்கள் அனைவரும் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வாலாஜாபாத் அருகே உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். மாணவர்கள் மூன்று நாட்களாக வீட்டுக்கு வராததால், அவர்களது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஜனவரி 15, 2025 அன்று ஏரியில் அவர்களது உடல்கள் மிதப்பதாக உள்ளூர் மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு உதவியுடன் போலீசார் உடல்களை மீட்டனர்.

உடல்கள் கனமாக அழுகிய நிலையில் இருந்தன, மேலும் உறவினர்கள் அவர்களது முகங்களில் தீக்காயங்கள், வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட காயங்கள் இருப்பதாகக் கூறி, இது மர்மமான கொலை என்று சந்தேகம் எழுப்பினர். மூன்று மாணவர்களின் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை... ஜாமின் ரத்துக்கு எதிர்ப்பு..!! சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல்..!!

தங்களது மகன்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்திருப்பதாக பெற்றோர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஓராண்டு கடந்தும் வழக்கின் விசாரணையில் வெளிப்பட தன்மை இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாணவர்களின் மர்மம் மரணம் குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகங்கை ஆகாஷ் மரணம்! உடலில் 28 காயங்கள்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த போலீஸ் அராஜகம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share