×
 

கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

கோவை சிறுமி கொலை வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கார்த்திக் என்பவனும், அவனுக்கு உதவிய மோகன் ராஜையும் போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், கோவை சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுமி கொலை வழக்கில் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய சூலூர் கொடூரம்..! கைதாகிய 2 பேர் மீதும் பாய்ந்த குண்டாஸ்..!

 மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது. விசாரணையை கூடுதல் எஸ்.பி. கண்காணித்து வருகிறார் என்றும் கைதான இருவரும் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share