×
 

ஹிந்தியை திணிச்சா பின்விளைவு மோசமா இருக்கும்! முத்தரசன் எச்சரிக்கை..!

வலுக்கட்டாயமாக ஹிந்தியில் திணிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எதிர்மறையான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என முத்தரசன் கூறினார்.

தென்னக ரயில்வே பணிகளில் தமிழ், ஆங்கிலம் முக்கியமாக பயன்படுத்தப்படும் நிலையில் ஹிந்தியை பயன்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து இடங்களிலும் இந்த மொழியில் அதிக அளவில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

ரயில் டிக்கெட் கவுண்டர்கள், ஆவணங்கள் சரிபார்ப்பு, உள்ளறிக்கைகள் என தினசரி செயல்பாடுகளில் ஹிந்தி மொழி அவசியம் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அலுவலக செயல்பாடுகளில் இந்தி மொழி பயன்பாட்டை மேம்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில்வே துறையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவிடப்பட்டதால் தென்னிந்திய ரயில்வே பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே துறையின் தொடர்பு மொழியாக ஹிந்தியை பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளதால் பயணிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தி பயன்பாட்டை அதிகரிக்கும் உத்தரவாதிக்க ரயில்வேயில் மறைமுகமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக புகார் எழுந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கை நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார். ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும் நிலைதான் நாட்டில் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீக்கிரமே நல்ல முடிவு வரும்! 10வது நாளாக போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் சண்முகம் சந்திப்பு

ரயில்வே துறை பணிகளில் தற்போது ஹிந்தி பேசும் மக்கள்தான் அதிகம் நியமிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். வலுக்கட்டாயமாக ஹிந்தியில் திணிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எதிர்மறையான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 1965 ல் தமிழ்நாடு ஹிந்திக்கு எதிராக துணிந்து நின்றதை போல் மீண்டும் ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகளை குறிவைக்கும் இபிஎஸ்..! கொந்தளித்த முத்தரசன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share