“வேண்டாம் இங்க ஜெபக்கூட்டம் நடத்தாதீங்க”... இட்டமொழியை அதிர விட்ட இந்து முன்னணியினர்... விநாயகர் சிலையுடன் அட்ராசிட்டி...!
திசையன்விளையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஜெபக்கூட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறி ஜெப கூட்ட வாசலில் பிள்ளையார் சிலையை வைத்து பஜனை செய்யப் போவதாக திரண்ட இந்து முன்னணியினரால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அனுமதி இன்றி ஜெபக்கூட்டம் நடத்தப்படுவதாகவும் , அனுமதி இன்றி நடத்தப்படும் ஜெபக்கூட்டத்தை நிறுத்தாவிட்டால் ஜெபக்கூட்ட அரங்கு வாசலில் பிள்ளையார் சிலையை வைத்து பஜனை செய்யப் போவதாக கூறிய இந்து முன்னணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை இட்ட மொழி சாலை அருகே உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இன்று இரவு ஜெபக்கூட்டம் நடந்தது. ஜெபக்கூட்டம் அனுமதியின்றி நடப்பதாகவும் அதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் ஜெப கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர்.
மேலும் ஜெபக்கூட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் ஜெபக்கூட்ட வாசலில் பிள்ளையாரை வைத்து பஜனை செய்வோம் எனக்கூறி ஜெப கூட்டத்தை நிறுத்த கூறி கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை காவல் ஆய்வாளர் சீதா லட்சுமி, உதவி ஆய்வாளர் ராமநாதன் மற்றும் காவல்துறையினர் ஜெப கூட்டத்தை தலைமையேற்று நடத்திய ரஞ்சித் என்பவரிடம் முறையாக நீதிமன்ற அனுமதி பெற்று ஜெப கூட்டத்தை நடத்துங்கள்.
இதையும் படிங்க: தர்கா அருகே அட்ராசிட்டி... இந்து முன்னணியினர் போலீசார் இடையே கைகலப்பு... முக்கிய நிர்வாகிகள் படுகாயம்...!
அனுமதி பெறும் வரை இந்த இடத்தில் ஜெபக்கூட்டம் நடத்த வேண்டாம்.அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என அறிவுறுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து ஜெப கூட்டத்தை நிறுத்தப்பட்டது .உடனே இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இருதரப்பினரும் கலைந்து செல்லும் வரை இந்து முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட பிள்ளையார் கூட்ட அரங்கின் எதிர்புறம் உள்ள இட்ட மொழி சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தின் பின்புற இருக்கையில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்ததை பார்த்த பொதுமக்கள் பலர் விஜர்சனம் முடிந்த பின்னரும் வினை தீர வில்லையோ ? என கூறியபடி சென்றனர். இச்சம்பவத்தால் இட்டமொழி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடச்சீ... அரை நிர்வாணத்துடன் பெண்களிடம் ஆபாச சைகை... காவலரின் அருவருக்கத்தக்க செயல்...!