ஒகேனக்கல் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு... 4வது நாளாக வெளியானது முக்கிய எச்சரிக்கை...!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டு அக்டோபர் 16ஆம் தேதி, அதாவது 4 நாட்கள் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை கர்நாடகா அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்துவிட்டுள்ளது. மற்றொருபுறம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் தமிழக காவேரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 22ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி விநாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று இரவேடி 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 23ம் தேதி நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கான நீர்வரத்து 43,000 கன அடியாக இருந்தது.
நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தற்போது நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமாய் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஓகேனக்கல்... 2வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு...!
இந்த நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில் நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையும் படிங்க: ப்ளீஸ் எக்காரணம் கொண்டும் இந்த பக்கம் வராதீங்க... ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை...!