ப்ளீஸ் எக்காரணம் கொண்டும் இந்த பக்கம் வராதீங்க... ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை...!
காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோரப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று இரவு முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு எட்டாயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து, இரவு நேரத்தில் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக திடீரென அதிகரித்தது. இன்று காலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து மேலும் அதிகரித்து தற்போது நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகத்துள்ளது.
இதையும் படிங்க: எங்ககிட்ட விளையாடாதீங்க! வேறமாதிரி ஆகிரும்! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் வார்னிங்!
இந்த நீர் வரத்து காரணமாக மெயின் அருவிக்கு செல்லக்கூடிய நடைபாதை நீரில் மூழ்கிவாறு தண்ணீர் செல்கிறது மேலும் மெயின் அருவி சினி அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது மேலும் காவிரி கரையோரப் பகுதிகளில் பெயக்கூடிய மலையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கவும் குறையவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த நீர் வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.
இதையும் படிங்க: சும்மா கவர்னரை சீண்டுனா அவ்ளோ தான்... உதயநிதிக்கு நயினார் பகிரங்க எச்சரிக்கை...!