×
 

தொடரும் கனமழை எதிரொலி! ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு கடந்து, நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share