×
 

#BREAKING: கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை!

தொடர் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் (வலுவிழந்த 'டிட்வா' புயல்) தாக்கம் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கான அபாயம் நீடிப்பதால், நாளை (டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது. இதன் காரணமாக, வானிலை ஆய்வு மையம்:

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை (கனமழை): செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்னைக்கு ஸ்கூல் எல்லாம் லீவு.. தேர்தல் பயிற்சி காரணமாக மூடல்..!! எங்க தெரியுமா..??

தொடர் கனமழை மற்றும் வானிலைப் பாதுகாப்புக் கருதி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்: திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: சென்னைக்கு மிக அருகில் வலுவிழந்த 'டிட்வா' புயல்.. திருவள்ளூர், சென்னைக்கு 'ரெட் அலர்ட்'!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share