×
 

சென்னைக்கு மிக அருகில் வலுவிழந்த 'டிட்வா' புயல்.. திருவள்ளூர், சென்னைக்கு 'ரெட் அலர்ட்'!

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருவதால், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிகக் கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வலுவிழந்த 'டிட்வா' புயல், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிகக் கனமழைக்கான 'ரெட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு மிக அருகில் நிலை கொண்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இன்று வெளியான அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது இதன் வேகம் சற்று குறைந்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு வெறும் 50 கி.மீத்தூரத்திலேயே நீடிக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் நிலை கொண்டிருக்கும் சூழலில், டிசம்பர் 1, 2025 இன்று, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட்  அலர்ட் விடுககப்பட்டுள்ளது. அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரைக்காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதையும் படிங்க: மெரீனாவுக்கு போகாதீங்க..!! கொந்தளிக்கும் கடல் அலைகள்.. வீசும் சூறாவளிக்காற்று..!! மக்களுக்கு வார்னிங்..!!

அடுத்த 7 நட்களுக்கு அதாவது, டிசம்பர் 2 முதல் டிசம்பர் 7, 2025 வரையிலான நாட்களில், தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் இடி – மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் எவரும் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கடல் பரப்பில் நிலவும் இந்தச் சுழற்சியால், சென்னை மற்றும் வடக்குக் கடலோர மாவட்டங்களில் அதிக மழையும், வலுவான காற்றும் நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: இலங்கைக்கு துணை நிற்போம்..!! உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயார்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share